Daily Message

Buon giorno! Happy morning! Today the catholic church does the canonization of sainthood to Martyr DevaSahayam Pillai. As a child studying in fifth and sixth grade, when my father was working in Thengamputhur, our family was staying in Nagarkovil. My father had a lamby scooter those days , and in that veh7cle, our family of five travelled to the nearby places. One place we often visited during weekends was Aralvaimozhi. Our next door protestant family, they had this morning glory flowers in their garden. So I remember vividly carrying these morning glory seeds in my hands and sowing them everywhere on the way to the aralvaimozhi mountain where DevaSahayam Pillai was martyred. Always the bell sound vibrations of the rock, did something to me even as a child. This week my parents are celebrating their golden wedding anniversary and I would like to dedicate this happy memory to them. Today my dad with his alzhiemers disease and my mother in taking good care of him, have their own crosses to carry. On this special day of St.Devasahayam Pillai, I pray God and His angels to send special heavenly blessings for all families on this earth. My love and prayers to my spiritual counselor. And my loving blessings to our daughter. Long live the Nature and its wonders!
புன் ஜியோர்னோ! இனிய காலை வணக்கம்!! கத்தோலிக்க திருச்சபையானது தியாகி திரு. தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கி கெளரவிக்கின்றது. நான் 5 மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுவயதில், எங்கள் குடும்பம் நாகர்கோவிலில் தங்கியிருந்தது; எனது தந்தை தெங்கம்புதூரில் பணிபுரிந்து வந்தார். அந்த நாட்களில் என் அப்பா ஒரு லேம்பை ஸ்கூட்டர் வைத்திருந்தார்; நாங்கள் 5 பேர் கொண்ட மொத்த குடும்பமும் அந்த வாகனத்திலேயே அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வருவோம். வார இறுதி நாட்களில் நாங்கள் அடிக்கடி செல்லும் இடம், திரு. தேவசகாயம் பிள்ளை அவர்கள் தியாகம் செய்த ஆரல்வாய்மொழி மலை. எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தோர் பிராட்டஸ்டண்ட் நம்பிக்கையை பின்பற்றும் குடும்பம்; அவ்ர்களின் தோட்டம் மகிமை பூக்களால் நிறைந்திருந்தது. நாங்கள் ஆரல்வாய்மொழி மலைக்கு செல்லும் போதெல்லாம், மகிமை பூவின் விதைகளை என் கைகளில் ஏந்தி, செல்லும் வழியில் எல்லா இடங்களிலும் விதைத்ததை நான் இப்போதும் தெளிவாக நினைவில் கொள்கிறேன். அப்போதெல்லாம் மணி ஓசையும், பாறையின் மீதுபட்டு எதிரொலிக்கும் அதிர்வுகளும், குழந்தையாக இருந்தபோதும் எனக்கு என்னவோ செய்தது. இந்த வாரம் எனது பெற்றோர்கள் தங்களுடைய 50 வது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள்; இந்த மகிழ்ச்சியான நினைவை அவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இன்று என் அப்பா அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்; அவரை நன்றாக கவனித்துக் கொள்வதையே தனது கடமையாக, சுமக்கும் சிலுவையாக என் தாயார் கொண்டுள்ளார். புனிதர் திரு. தேவசகாயம் பிள்ளை அவர்களின் இந்த சிறப்பு நாளில், இந்த பூமியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சிறப்பு பரலோக ஆசீர்வாதங்களை அனுப்ப கடவுளையும் அவருடைய தூதர்களையும் பிரார்த்திக்கிறேன். எனது ஆன்மீக ஆலோசகருக்கு எனது அன்பும் பிரார்த்தனைகளும்! எங்கள் மகளுக்கு என் அன்பான ஆசிகள்!! இயற்கையும் அதன் அற்புதங்களும் வாழ்க!!!

Comments

Popular posts from this blog

Daily message

Daily message